எல்லா உயிரினங்களுக்கும் சுவாசிக்கக் காற்று, உண்ண உணவு, குடிக்கத் தண்ணீர் தேவைப்ப்டுகின்றன. இவை மாசுபட்டால் நம் சுகாதாரம் பாதிப்படைகின்றது. எல்லாம் வல்ல இறைவன் தந்த இந்த பூமியின் சுகாதாரமும், உலக வெப்பமயமாதல் என்னும் கொடிய நோய்க்கு ஆட்பட்டுள்ளது. நாம் வாழும் வாழ்க்கையின் அடிப்படை ஆதாரம் பூமியின் நலனே. மனிதர்களின் வாழ்விடங்கள் மாசுபட்டதால் பலவித கெடுதல்கள் சூழ,அதனை சமாளித்து போராடி வாழ வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம்.
ஆகவே வரும் தலைமுறையினருக்கு மாசற்ற சூழலை உருவாக்க வழி அமைத்து உதவுவதே இந்த வலைப் பூவின் நோக்கம். இந்த வலைப் பதிவில் நாம் ஒவ்வொருவரும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சுகாதாரம் குறித்து அறிந்தும், உணர்ந்தும் பெற்ற அனுபவங்களை பதிய வேண்டுகிறேன். இதன் நோக்கம் தெளிவான விழிப்புணர்வை,மிக வலிமையோடு எளிய முறையில் அனைவரும் பகிர்ந்து கொள்தலே.
இந்த வலைப் பூவில் பதியப்படும் கருத்துக்கள், அடுத்த தலைமுறையினருக்கு விதைக்கப் படும் வித்துக்களே.
நன்றி.


அன்பு நண்பர் பாபுவிற்கு வணக்கம்,
ReplyDeleteதங்களின் வலைப்பூ கண்டு மகிழ்ந்தேன்.
தங்களின் இந்த வலைப்பூ வளர, வாடாமலராய்
என்றென்றும் மனம் வீச எனது மனமார்ந்த
வாழ்த்துக்கள்.
என்றென்றும் அன்புடன்,
கரந்தை ஜெயக்குமார்
எழுத ஆரம்பியுங்கைஃ, காத்திருக்கிறோம்.
ReplyDelete